Published : 23,Nov 2017 05:12 AM
தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் கேரள ஆடைக் கழிவுகள்

கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்டு தேனி மாவட்டம் சரத்துபட்டியில் கொட்டப்பட்ட அய்யப்ப பக்தர்களின் ஆடைக்கழிவுகள் அம்மாநிலத்திற்கே திரும்ப அனுப்பப்பட்டது.
மண்டல பூஜை தொடங்கியுள்ள நிலையில் அய்யப்ப தரிசனம் செய்ய தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநில பக்தர்கள் சபரி மலையில் குவிகின்றனர். இந்நிலையில் அய்யப்ப பக்தர்கள் தொடர்ந்து தங்களது ஆடைகளை பம்பை நதியில் விட்டு வருகின்றனர். இவ்வாறு விடப்படும் ஆடைகளை அப்புறப்படுத்தும் பணியை தனியார் நிறுவனம் ஒன்று செய்கிறது.
இந்த துணியை மறுசுழற்சி செய்ய கேரளாவில் தடை உள்ளதால் அவை அனுமதியின்றி தேனி மாவட்டம் சரத்துப்பட்டி கொண்டுவரப்பட்டு உலர்த்தி தரம் பிரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, தொற்று நோய் ஏற்படும் சூழல் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். தகவலறிந்த வருவாய்த்துறையினர் துணி கொட்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அவற்றை மீண்டும் கேரளாவிற்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.