[X] Close

பேரறிவாளனை விடுவிக்க கூடாது என அதிமுக எம்.பி எதிர்ப்பு

AIADMK-MP-opposed-to-release-of-perarivalan

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிப்பதற்கு அதிமுக எம்பி-யான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியதற்காக பேரறிவாளனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டித்த குற்றவாளியை நிரபராதி என்று கூறுவதை ஆதரிப்பதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் முன்வந்திருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். 

ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கைகளுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சி கருத்து கூறாமல் மௌனமாக இருப்பது ஏன்? இதுதான் ராஜீவ்காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் செய்கிற அஞ்சலியா? எனவும் அதிமுக எம்பி வினவியுள்ளார். எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் காங்கிரஸ் கட்சியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸூக்குச் சென்று அங்கிருந்து அதிமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close