ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு மருத்துவர்கள் 2 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மரணத்தில் சந்தேகம் உள்ளதாக எழுந்த புகாரையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல்களை நவம்பர் 22 ஆம் தேதி வரை தபால் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் விசாரணை ஆணையத்திடம் தகவல் அளித்துள்ளனர்.
இந்நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை இன்று தொடங்கியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்த திமுக மருத்துவர் அணியைச் சேர்ந்த சரவணனிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு மருத்துவர்கள் 2 பேருக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய ஆறுமுகசாமி, ஜெயலலிதா மரண விவகாரத்தில் யாராக இருந்தாலும் உண்மையை வெளிக்கொண்டு வர முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்றார். யார் எப்போது பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்தாலும் ஏற்றுக்கொள்வோம் எனவும் ஆறுமுகசாமி கூறியுள்ளார். 2 பேருக்கு விசாரணை ஆணையத்தின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த 2 பேர் யார் என்பது இதுவரை தெரியவில்லை. நாளை அவர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜராகும் பட்சத்தில் அந்த இரண்டு மருத்துவர்கள் யார் என்ற விவரம் தெரிய வரும். எந்த தகவல் அடிப்படையில் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவலும் இதுவரை தெரியவரவில்லை.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி