
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி காலணி வீசப்பட்டுள்ளது.
அரியானா மாநிலம் ரோதக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி கூட்டத்திலிருந்த ஒருவர் காலணியை வீசினார். இருப்பினும் அந்த காலணி கெஜ்ரிவால் மீது படாமல் மேடையில் விழுந்தது. இதையடுத்து, காலணியை வீசியவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.