நெருக்கடிகளுக்கு பணிந்து ஜிம்பாப்வே அதிபர் பதவியை ராபர்ட் முகாபே ராஜினாமா செய்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராணுவம் அதிரடியாக அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத்தை நசுக்கும் அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு நெருக்கமான நபர்களை குறிவைத்து ராணுவம் இந்நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. நாட்டின் நிர்வாகத்தை ராணுவம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில் முகாபே கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். ஜிம்பாப்வே அதிபர் பதவியில் இருந்து விரைவில் முகாபே நீக்கப்படுவார் என ஆளும் ஜானு - பிஎஃப் கட்சி தெரிவித்திருந்தது.
அதிபர் பதவியில் இருந்து விலகுவதற்காக முகாபேவுக்கு வழங்கப்பட்ட கெடு முடிவடைந்த நிலையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டதாகவும் பிஎஃப் கட்சி எச்சரித்தது. மேலும் அவருக்கு எதிராக தொடர் போராட்டங்களும் நடந்து வந்தன. இதனையடுத்து அதிபர் பதவியை ராபர்ட் முகாபே ராஜினாமா செய்துள்ளார். இந்த முடிவு தானாக எடுக்கப்பட்டது என்றும், சுமூகமாக அதிகாரம் கைமாறவேண்டும் என்பதற்காக தாமே எடுத்த முடிவு என முகாபே தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, பதவியில் இருந்து விலக முகாபே மறுத்து வந்தார். ஜிம்பாப்வே 1980-ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து 37 ஆண்டுகளாக முகாபே அதிபராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!