Published : 22,Nov 2017 02:04 AM

ஜெயலலிதா மரணம்: இன்று விசாரணை தொடக்கம்

Jayalalitha-Death--Enquiry-Starts-today

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மனுக்கள், பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்தவர்களிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இன்று தனது விசாரணையை தொடங்குகிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விசாரிப்பதற்காக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் நவ.22 ஆம் தேதி அதாவது இன்றைய தினம் வரை தபால் மற்றும் தொலைபேசி வாயிலாக  தகவல்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆணையத்தில் இதுவரை 9 பிரமாணப் பத்திரங்கள், 70 பதிவு தபால்கள் வந்துள்ளன. மேலும், ஆவணங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இந்நிலையில், கோவையில் இருந்து சென்னை வந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, சென்னை எழிலகத்தில் இன்று தனது விசாரணையை தொடங்குகிறார். முதல்நபராக திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணனிடம் தனது விசாரணை தொடங்குகிறார். அரசியல் தலைவர்கள், அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் சிறப்பு அதிகாரம் வழங்கக்கோரி தமிழக அரசுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்