Published : 21,Nov 2017 04:54 PM
பத்மாவதி விவகாரத்தில் கொலை மிரட்டல் விடுவது குற்றம்: யோகி ஆதித்யநாத்

பத்மாவதி திரைப்படத்தில் நடித்த நடிகை மற்றும் இயக்குநருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதை குற்றமாக கருதுவதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
பத்மாவதி திரைப்படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே மற்றும் இயக்குநரின் தலையை வெட்டி கொண்டுவருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு என ஹரியானா மாநில பா.ஜ.கவின் மூத்த ஊடக ஒருங்கிணைப்பாளரான சுராஜ் பல் அமு அறிவித்துள்ளார். அத்துடன் மேலும் சிலரும் பத்மாவதி திரைப்படக்குழுவினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் பத்மாவதி திரைப்படத்தில் நடித்த நடிகை மற்றும் இயக்குநருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதை குற்றமாக கருதுவதாக யோகி கூறியுள்ளார். அதேசமயம் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி செய்த குற்றம், கொலை மிரட்டல் விடுப்பவர்களின் குற்றத்திற்கு சற்றும் குறைந்ததல்ல என்றும் யோகி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் யாரும் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.