Published : 21,Nov 2017 10:23 AM
பட்டப்பகலில் வழிப்பறி செய்தவன் கையும் களவமாக பிடிபட்டான்

ஓமலூரில் பள்ளி ஆசிரியரை வழிமறித்து செயினை பறித்து சென்ற திருடனை தீவட்டிபட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கண்ணப்பாடி மலை கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரேமா. இவர், சம்பவதன்று தனது ஸ்கூட்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின் தொடர்ந்த மர்ம மனிதர்கள், கத்தியை காட்டி மிரட்டி எட்டரை சவரன் தங்க சங்கிலி மற்றும் அரை சவரன் தங்க மோதிரம் ஆகியவற்றை அவரிடம் இருந்து பறித்துக் கொண்டு சென்றுள்ளனர். இந்த வழிப்பறி கொள்ளை தொடர்பாக ஆசிரியர் பிரேமா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருடன், ஒரு பெண்ணிடம் வழிப்பறி செய்ய முயன்றபோது கையும் களவுமாக பிடிப்பட்டான். அவனிடன் நடத்திய விசாரணையில், அந்தப் பகுதியில் நடந்த பல்வேறு வழிப்பறி கொள்ளைகளுக்கு அவனே காரணம் என்பது தெரிய வந்தது. பின்பு அவனை போலீசார் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.