[X] Close

'காதலுக்கு அர்த்தம் தேடுகிறேன்’ என்கிறார் த்ரிஷா

Actress-Trisha-Speech-at-UNICEF-celebrity-advocate-for-child-rights

‘காதல் என்ற வார்த்தைக்கு அகராதியில் அர்த்தத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்’ என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.


Advertisement

இன்று யுனிசெஃப் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விழாவில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டார். இதன் செலிபிரைட்டி அட்வகேட் ஆக த்ரிஷாவை அமர்த்தியிருக்கிறது அந்நிறுவனம். அதில் கலந்து கொண்ட த்ரிஷா,” நம்நாட்டில் விழிப்புணர்வு இல்லாததே எல்லாவிதமான பாலியல் குற்றங்களுக்கும் மூல காரணம். 
திரைப்படங்களை சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவை வெறும் பொழுதுபோக்கு மட்டுமே” என்று தெரிவித்தார். அவரிடம் காதல் சம்பந்தமான கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர், “காதல் எனும் வார்த்தைக்கான அர்த்தத்தை நானும் அகராதியில் தேடிக்கொண்டு இருக்கிறேன்” என்றார்.


Advertisement

Advertisement
[X] Close