[X] Close

’டிக்டிக்டிக்’ ட்ரெய்லர் 24 அன்று வெளியாகிறது

tik-tik-tik-trailer-release-date-announced

ஜெயம் ரவி நடித்துள்ள ‘டிக்டிக்டிக்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இம்மாதம் 24ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்து வரும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’. ‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயம் ரவியை இயக்கி வருகிறார் சக்தி செளந்தர்ராஜன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலத்தில் உள்ள மூணார் பகுதி முதலில் தொடங்கியது. இதில் முதன்முறையாக ஜெயம் ரவியின் மகன் ஆரவ் நடிக்கிறார். இதில் ஜெயம் ரவி வெடிகுண்டு நிபுணராக நடித்திருக்கிறார். 
இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயம் ரவி “இங்கே எல்லோரும் எதிர்பார்த்த செய்தி. மகிழ்ச்சிகரமாக அறிவிக்கிறேன். டிக்டிக்டிக் படத்தின் ட்ரெய்லரை இந்த மாதம் 24 அன்று வெளியிட உள்ளோம். இதில் வேறுவிதமான உலக அனுபவத்தை கண்டு மகிழ்வீர்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
 


Advertisement

Advertisement
[X] Close