Published : 20,Nov 2017 10:07 AM

ஜெர்மனியில் பிரதமரின் ஆட்சிக்கு ஆபத்து!

Germany-Prime-Minister-Government-in-critical-situation

ஜெர்மனியில் ‌எஃப்டிபி கட்சியு‌‌டன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருப்பதால் பிரதமர் ஏஞ்சலா மெர்‌கலின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

ஜெர்மனியில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்‌கல் சார்ந்த பழமைவாத கிறிஸ்தவ கட்சி 33 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. எனினும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்காததால் எஃப்டிபி கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் பிரதமர் ஏஞ்சலாவின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அதிபர் பிரான்க் வால்டர் ஸ்டெயின்மெய்ரை சந்திக்க உள்ள ஏஞ்சலா மெர்கல் மீண்டும் புதிதாக தேர்தல் நடத்தும்படி கோரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்