[X] Close

ஜிம்பாப்வே அதிபர் முகாபே பதவி விலக மறுப்பு

Zimbabwe-s-Robert-Mugabe-vows-to-stay-on-despite-party-pressure

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தான் தொடர்ந்து பதவியில் நீடிப்பதாக அறிவித்துள்ளார். தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராணுவம் அதிரடியாக அதிகாரத்தை‌ கைப்பற்றியுள்ளது. நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத்தை நசுக்கும் அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு நெருக்கமான நப‌ர்களை குறிவைத்து ராணுவம் இந்நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. நாட்டின் நிர்வாகத்தை ராணுவம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில் முகாபே கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக தொடர்நது பதவியில் நீடிப்பதாகவும் ஆளும் கட்சியின் கூட்டம் விரைவில் நடக்கும் என்றும் அவர் அரசுத் தொலைக்காட்சியில் தெரிவித்தார். 

முகாபேவின் அறிவிப்பு தங்களுக்கு பேரதிர்ச்சி தருவதாக மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஜிம்பாப்வேயில் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிபர் முகாபே பதவி விலக வலியுறுத்தி நாடெங்கும் போராட்டங்கள் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 37 ஆண்டுகளாக ஜிம்பாப்வே அதிபராக இருந்து வரும் முகாபே ஒரு நாட்டை நீண்ட ஆண்டுகள் ஆண்ட உலகத் தலைவர்களுள் ஒருவர் என்ற பெருமையை பெற்றவர் ஆவார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close