சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு சர்வதேச நினைவு நாள் இன்று

சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு சர்வதேச நினைவு நாள் இன்று
சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு சர்வதேச நினைவு நாள் இன்று

சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு சர்வதேச நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பாதுகாப்பான சாலை பயணம் என்ற வகையில் சென்னையில் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சாலை விபத்தில் உயிரிழந்தோருக்காக, 2005-ம் ஆண்டு முதல் நவம்பர் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று சர்வதேச நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ‌உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு, இளைஞர்கள் மத்தியில் இல்லை என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

இளைஞர்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளியிலேயே சாலை பாதுகாப்பு குறித்த பாடம் சேர்க்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சாலை விபத்துக்கள் தடுக்க அரசு சார்பில் பல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டாலும் வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு வேண்டும். குறைந்தபட்சம், செல்ஃபோன் பேசாமல், மது அருந்தாமல், மிதமான வேகத்தில் செல்லுதல் என அடிப்படை சாலை விதிகளை முறையாக பின்பற்றினாலே விபத்துக்களை பெரும்பாலும் தவிர்க்க முடியும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com