[X] Close

கருணாநிதியும் கருப்புகண்ணாடியும் 46 ஆண்டுகால பந்தம்

DMK-Leader-Karunanidhi-Changes-his-Specs

 


Advertisement

உடல்நலம் கருதி திமுக தலைவர் கருணாநிதிக்கு மூக்கு கண்ணாடி மாற்றப்பட்டுள்ளது. கருணாநிதி, புது மூக்கு கண்ணாடி அணிந்திருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

பிரிக்க முடியாதது, கருணாநிதியையும் கருப்புக் கண்ணாடியையும் என்று திருவிளையாடல் திரைப்பட வசனத்தைப் போன்று பல்வேறு தரப்பினர் பேசுவதுண்டு.அந்த அளவிற்கு அவர் கருப்பு நிறத்தில் தடிமான கண்ணாடி அணிவது பேசப்பட்டு வந்தது. விபத்தில் இடது கண்ணில் அடிபட்டதால் 1971ல் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட கருணாநிதி அப்போது இருந்து தடிமனான கண்ணாடியை அணிந்து வந்தார். இந்நிலையில், உடல்நலம் குன்றியுள்ள கருணாநிதிக்கு, தடிமான கண்ணாடியால் அழுத்தம் ஏற்படுவதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து அவருக்காக வெளிநாட்டில் இருந்து இலகுவான மூக்கு கண்ணாடி வரவழைக்கப்பட்டுள்ளது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close