Published : 19,Feb 2017 06:08 AM
ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசினார்.
சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 வாக்குகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றிபெற்றது. இதையடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்டோரும், அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ஆளுநரை சந்தித்துப் பேசினர். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.