குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா வெளியிட்டுள்ளது.
182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்ட தேர்தலும் முடிந்த பின் டிசம்பர் 18-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்லுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா வெளியிட்டுள்ளது. படேல் சமூகத்தினர், பழங்குடியினர் என 36 பேர் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் தற்போதைய அமைச்சர் உள்பட 12 எம்எல்ஏக்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. ஏற்கனவே 70 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது.
நவம்பர் 21-ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் இதுவரை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix