Published : 18,Nov 2017 02:39 PM

சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறந்த இடத்தில் உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

edappadi-palanisamy-sivagangai-meeting-speech

சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த இடத்தில் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படவில்லை என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தி வருகின்றன. இந்நிலையில் சிவகங்கையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த இடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. 
திமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்தது. கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் திமுக ஆட்சியில் அதிகம் நடைபெற்றன. தமிழகத்தை நிரந்தரமாக அதிமுகவே ஆட்சி செய்யும். தொண்டர்கள் மற்றும் மக்கள் விருப்பத்திற்கேற்ப ஆட்சி நடைபெறும். அதை தடுக்க முடியாது” என்று கூறினார்.


 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்