Published : 18,Nov 2017 11:18 AM

வடமாநிலங்களை வதைக்கும் கடும்பனிப் பொழிவு

Heavy-Snowfall-in-Kashmir--Rainfall-in-Delhi

டெல்லி, ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் அதிகரித்துள்ள பனிப்பொழிவால் பாதை மங்கலாக தெரிந்த நிலையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இமாசலப் பிரதேச மாநிலத்தின் துண்டி பகுதியில் வாகனங்களின் மீது பனி படிந்து காணப்பட்டது. அங்கிருந்த ஆறும் உறைந்து போய் காணப்பட்டது. உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத்திலும் வீடுகள், மரங்கள் மீது பனி படர்ந்து காணப்பட்டது. பனிப்பொழிவு காரணமாக காலை வேளையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு காணப்படுகிறது. ப்ரி பஞ்சால் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் புகழ்பெற்ற முகலாயர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பனிப்பொழிவு குறையும் பட்சத்தில் சாலை போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்