முதல் ரன்னை விட்டுக்கொடுக்கும் முன், அதிக பந்துகளை கட்டுப்படுத்திய வீரர் என்ற சாதனையை இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சுரங்கா லக்மல் படைத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக, போட்டி நண்பகலில்தான் தொடங்கியது. முதல் நாள் வீசப்பட்ட முதல் பந்திலேயே லோகேஷ் ராகுலின் விக்கெட்டை வீழ்த்தினார் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் சுரங்கா லக்மல்.
முதல் நாள் போட்டியில் 6 ஓவர்கள் வீசிய அவர், ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்கவில்லை. இரண்டாம் நாளும் தொடர்ந்து பந்துவீசிய லக்மல், தனது 47 வது பந்தில்தான் முதல் ரன்னை கொடுத்தார். இதன் மூலம் முதல் ரன்னை விட்டுக்கொடுக்கும் முன் அதிக பந்துகளை கட்டுப்படுத்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன் 2002-ல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டெய்லர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, 40 பந்துகள் வரை ரன் கொடுக்காமல் இருந்ததே சாதனையாக இருந்தது.
Loading More post
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?