Published : 18,Nov 2017 02:59 AM

நடுவானில் விமானம் - ஹெலிகாப்டர் மோதல்: 4 பேர் பலி

aircraft-and-helicopter-crash-in-mid-air-in-England

இங்கிலாந்தில் நடுவானில் சிறிய ரக விமானமும் ஹெலிகாப்டரும் நடுவானில் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

இங்கிலாந்தின் தென் பகுதியில் உள்ளது பக்கிங்ஹாம்ஷையர். இந்தப் பகுதியில் செஸ்னா ரக சிறிய விமானம் ஒன்று பறந்துகொண்டிருந்தது. அதே நேரத்தில் ஹெலிகாப்டர் ஒன்றும் பறந்துகொண்டிருந்தது. இரண்டும் திடீரென்று நடுவானில் மோதிக்கொண்டதை அடுத்து வின்சென்டன் என்ற பகுதியில் நொறுங்கி விழுந்தன. இதைக் கண்ட பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து விமான பாகங்கள் விழுந்து கிடந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  
இந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும் எப்படி மோதிக்கொண்டது எப்படி என்பதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்