புஜாரா. உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. மழை காரணமாக இரண்டாவது நாள் போட்டியும் பாதிக்கப்பட்டது. நேற்றைய நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 74 ரன்கள் எடுத்துள்ளது. மழை காரணமாக முதல் நாளில் 12 ஓவர்களும், இரண்டாவது நாளில் 21 ஓவர்களும் மட்டுமே பந்துவீசப்பட்டன. முதல் நாளைப் போல இரண்டாவது நாளும் போட்டி பாதியிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது. இன்று மழைய குறைய வாய்ப்பிருப்பதால் போட்டி பாதிக்கப்படாது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியில் புஜாரா மட்டுமே நிலைத்து நின்று ஆடிவருகிறார். அவர் உலக அளவில் சிறந்த வீரர் என்று இலங்கை பயிற்சியாளர் நிக் போதாஸ் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, புஜாரா சிறப்பாக ஆடி வருகிறார். கவுண்டி கிரிக்கெட்டில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு அவர் ஆடிவருகிறார். எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக ஆடக்கூடிய வீரர் அவர். இலங்கை அணியின் லக்மல், புத்திசாலித்தனமான பந்துவீச்சாளர். சரியாக கணித்து பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துபவர்’ என்றார்.
இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறும்போது, ’எந்த கண்டிஷனிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர் புஜாரா. சரியான பந்துகளை தேர்ந்தெடுத்து அவர் ஆடிவருகிறார். அதனால் அவரால் நிலைத்து நிற்க முடிகிறது’ என்றார்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!