திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசும் போதே கண்கலங்கியது பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளங்கள், வாய்க்கால்களை சுத்தம் செய்ய அப்பகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் நிதியுதவி அளித்தனர். இதனையடுத்து அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நினைவு பரிசு வழங்கினார். அப்போது பேசிய அவர், திண்டுக்கல் மாவட்டத்தை பாதுகாக்க இவ்வளவு பேர் முன் வந்திருப்பது சந்தோஷத்தை அளிக்கிறது என பேசிக் கொண்டு இருக்கும் போதே அழுகை வந்து கண்ணீரை துடைத்து தண்ணீர் அருந்திவிட்டு மீண்டும் பேச துவங்கினார். அமைச்சரின் இச்செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!