Published : 17,Nov 2017 02:09 PM

மகன் நோயால் அவதிபடுவதை கண்டு மனமுடைந்த பெற்றோர் தற்கொலை

Parents-suicide-due-to-son-suffered-from-diabetes-in-thiruvallur

திருவள்ளூர் அருகே நீரிழிவு நோயால் அவதிப்பட்டுவந்த மகனை பராமரிக்க முடியாமல், வயதான தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கண்டிகையை சேர்ந்தவர்கள் கிருஷ்ணப்ப ரெட்டி, கோவிந்தம்மாள் தம்பதியர். இவர்களது மகன் செல்வம் நீரழிவு நோயால் கால் பாதிக்கப்பட்டு, கால் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டதால் மனமுடைந்த இந்த தம்பதியினர் நேற்றிரவு, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர். காலையில் வீட்டின் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கதவுகளை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது வாயில் நுரை தள்ளியபடி இருவரும் சடலமாக கிடந்ததை பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்