
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள குரும்பூர் மற்றும் நாசரேத் பகுதியில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்த 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர் இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான ஆற்று மணல் தட்டுப்பாடு நிலவுவதால் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆற்று மணல்களை எடுத்து அரசு அனுமதியில்லாமல் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் குரும்பூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு டிப்பர் லாரி மற்றும் 407 லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அரசு அனுமதியில்லாமல் ஆற்று மணல் ஏற்றிச் செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.
இதேபோல் நாசரேத் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அரசு அனுமதியில்லாமல் ஆற்று மணல் ஏற்றி வந்த ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநர் பாரதிதாசனை கைது செய்தனர். இந்த இரண்டு இடங்களில் நடைபெற்ற காவல்துறை சோதனையில் 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.