Published : 18,Feb 2017 11:29 AM

மெரினாவில் ஸ்டாலின் கைது

stalin-arrest-in-chennai-merina

சென்னை மெரினாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டபோது 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ரத்த காயங்களுடன் வெளிவந்ததாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் ஸ்டாலின் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மெரினா கடற்கரை சென்ற ஸ்டாலின், உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஸ்டாலினுடன் திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் மெரினாவில் உண்ணாவிரதம் இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். திமுக எம்எல்ஏக்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்