Published : 16,Nov 2017 10:24 AM
பதவி உயர்வில் பாலியல் பாரபட்சம்: செவிலியர் சங்கத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வில் பாலியல் பாரபட்சம் காட்டக் கூடாது உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணி மூப்பு அடிப்படையில் தாய்-சேய் நல அலுவலர் பணி வழங்க வேண்டும், பதவி உயர்வில் பாலியல் பாரபட்சம் கூடாது உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண் ஊழியர் என்பதால் குறைவான ஊதியம் வழங்குவது ஏற்புடையதா என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.