Published : 16,Nov 2017 06:47 AM
ஆட்சி வரை அதிமுக.. அதன்பின் பாஜக: ஓபிஎஸ், ஈபிஎஸ் குறித்து திவாகரன் கருத்து

ஆட்சி முடிந்த உடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் பாஜகவில் இணைந்து விடுவார்கள் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திவாகரன், அதிமுக தற்போதும் எங்களிடம்தான் உள்ளது. சோதனைகள் மூலம் எங்களை பணிய வைக்க முடியாது என கூறினார். சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பிக்கள்தான் அதிமுக என நினைத்தால் அது தவறு. தமிழகத்தில் ஆட்சி உள்ள வரை மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எல்லாம் அதிமுகவில் இருப்பார்கள். ஆட்சி முடிந்த பிறகு அவர்கள் பாஜகவில் இணைந்துவிடுவார்கள் என கூறினார்.