விஜய்னு பேர் வச்சாலே... ராதிகா திடுக் பேச்சு

விஜய்னு பேர் வச்சாலே... ராதிகா திடுக் பேச்சு
விஜய்னு பேர் வச்சாலே... ராதிகா திடுக் பேச்சு

ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்கும் படம், ‘அண்ணாதுரை’. விஜய் ஆண்டனி ஹீரோ.

அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு இசை அமைப்பதோடு, எடிட்டிங்கையும் கூடுதலாக கவனித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார்.
 
இதன் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் பேசும்போது,  ’வாழ்க்கையில் உழைப்பையும், உண்மையையும் மட்டும் தான் எப்போதும் நம்புவேன். எதற்கும் பயப்பட மாட்டேன். யார் எப்போது அழைத்தாலும் இரவு, பகல் பாராமல் அங்கு போய் உதவி செய்பவர் சரத்குமார். அவர் தான் சீனிவாசனிடம் கதையை கேட்டு, என்னையும் கதை கேட்க வைத்தார். விஜய் ஆண்டனிதான் அந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்றதும், அவரைக் கேட்கச் சொன்னேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ் மாதிரி உதவி செய்ய பலர் முன் வந்திருக்கிறார்கள். ஆனால் விஜய் ஆண்டனி எனக்காகவே படத்தை ஒப்புக் கொண்டு நடிக்க முன் வந்தார். பல உண்மையான மனிதர்கள், கொட்டிய உழைப்புதான் இந்த, அண்ணாதுரை. விஜய்னு பேர் வச்சாலே பூனை மாதிரி ரொம்ப அமைதியா இருப்பாங்க. அது ஜோசப் விஜய்யா இருந்தாலும் சரி, விஜய் ஆண்டனியா இருந்தாலும் சரி. இது சூர்யவம்சம் மாதிரி, ரொம்பவே பாஸிடிவ்வான படம்' என்றார். 

இயக்குனர்கள்  வசந்தபாலன், கிருத்திகா உதயநிதி, தயாரிப்பாளர்கள் டி.சிவா, ஞானவேல் ராஜா, தனஞ்செயன், காட்ரகட்டா பிரசாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com