Published : 15,Nov 2017 04:53 PM
அசல் ஒட்டுநர் உரிமம் கட்டாயம்தான்: உயர்நீதிமன்றம்

அசல் ஒட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனங்களை ஓட்டும்போது அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக, சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கங்களின் அகில இந்திய கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, அரசின் அறிவிப்பில் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தலைமை நீதிபதி தள்ளுபடி செய்தார். பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படும்போது பொதுநல மனுவாக தாக்கல் செய்யலாம் என்று கூறிய நீதிபதி, ஒட்டுநர் உரிமமே இல்லாமல் பலர் வாகனங்கள் ஒட்டுவதை தடுக்கவே இந்த உத்தரவு என்றார்.