[X] Close

முதல்வரின் அதிகாரங்களில் ஆளுநர் தலையிடக் கூடாது - ஈவிகேஎஸ் இளங்கோவன்

governor-should-not-interferes-cm-power-said-evks-elangovan

ஆளுநர் என்பவர் ஆளுநர் மாளிகையில் இருந்து கோப்புகளில் கையெழுத்திட வேண்டுமே தவிர முதல்வரின் அதிகாரங்களில் தலையிடுவது மிகப்பெரிய தவறு என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.


Advertisement

புதிய தலைமுறையின் சிறப்பு அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் கமிடியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசும்போது, ஆளுநரைப் பொருத்தவரையில், கிண்டி ராஜ்பவனில் நிம்மதியாக இருக்க வேண்டும். குறிப்பாக முதல்வர் அமைச்சரவையில் மாற்றம், வேறு ஏதாவது மாற்றம் போன்ற விவகாரங்கள் தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டு அறிவிப்பது, அல்லது பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது இதுபோன்ற சில குறிப்பிட்ட வேலைகள் அவருக்கு வரையறுத்து தரப்பட்டுள்ளன அதை மீறி செயல்படக்கூடாது.

ஆளுநர் மாநிலத்தின் நிர்வாகத் தலைவராக இருந்தாலும், முதல்வரின் அதிகாரங்களில் தலையிடக் கூடாது. உதாரணமாக ஜனாதிபதி தான் ராணுவத் தலைவர், அவர் என்ன போர்க்களத்திற்கா செல்கிறார். ஆளுநர் அதிகாரத்தின் ஒரு அடையாளமாகத்தான் இருக்க முடியுமே தவிர, ஒரு ஜனநாயக நாட்டில் ஆளுநர் அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு இருக்கிற அதிகாரங்களில் ஆளுநர் குறுக்கிடுவது மிகப்பெரிய தவறு என்று கூறினார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close