
சென்னை, வாரணாசி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களை அதிநேர்த்தியான நகரங்களாக்க ஜப்பான் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை ஜப்பான் தூதர் கென்ஜி ஹிராமட்ஸூ டெல்லியில் நேற்று சந்தித்தார். அப்போது சென்னை வாரணாசி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களை அதிநேர்த்தியான நகரங்களாக்க ஜப்பான் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாக கென்ஜி தெரிவித்தார். மேலும், இந்தியாவின் தொழிற் கூட்டாளியாக இருக்க ஜப்பான் தயாராக இருப்பதாகவும் கென்ஜி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயலாக்கத்துடன் கூடிய அணுகுமுறைகளுக்கு ஏற்ப செயல்பட ஜப்பான் தயாராக இருப்பதாகவும் வெங்கய்ய நாயுடுவிடம் கென்ஜி ஹிராமட்ஸூ உறுதியளித்துள்ளார்.