[X] Close

களத்தில் ஆய்வு செய்தால்தானே அரசை பாராட்ட முடியும்: ஆளுநர் புரோஹித்

TN-governor-speech-at-coimbatore

களத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினால்தானே அரசை பாராட்ட முடியும் என தமிழக ஆளுநர் பன்வாரில் புரோஹித் தெரிவித்துள்ளார்.


Advertisement

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார். கோவை நகரப்பேருந்து நிலையத்திற்கு  சென்ற ஆளுநர் பன்வாரிலால், அங்குள்ள பயோ-டாய்லெட் திட்டம் குறித்து ஆய்வு செய்தார். இதையடுத்து துடைப்பத்தை கையிலெடுத்த ஆளுநர், பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார்.

இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், “தென் இந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்மார்ட் நகர திட்டத்தில் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளதால், கொங்கு தமிழுடன் கோவை நகரம் இனி மிக வேகமாக வளர்ச்சியடையும். கோவை நகர பேருந்து நிலையத்தில் கழிப்பறை மற்றும் சுகாதாரப் பணிகள் சிறப்பாக உள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தை குடிசைப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அகமும், புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. கோவை மாவட்டம் 89.23% கல்வியறிவு பெற்றுள்ளது, இது தேசிய சராசரியை விட அதிகமாகும்” என்றார். இந்த நிகழ்ச்சியின்போது தமிழில் வணக்கம் தெரிவித்து ஆளுநர் பேசத் தொடங்கினார்.


Advertisement

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து நேற்றும் ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் பணிகள் குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டார். இது மாநில உரிமைகளுக்க எதிரானது என பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் களத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினால்தானே அரசை பாராட்ட முடியும் என ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close