’நாச்சியார்’ டீசர் நாளை வெளியாகிறது

’நாச்சியார்’ டீசர் நாளை வெளியாகிறது
’நாச்சியார்’ டீசர் நாளை வெளியாகிறது

பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாச்சியார்’ திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.

‘36’வயதினிலேவுக்குப் பிறகு ஜோதிகா நடித்திருக்கும் ‘நாச்சியார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இதில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷூம் நடித்திருக்கிறார். அவர், முதன்முறையாக வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. பிஞ்சுக் குழந்தையை காலில் போட்டு ஜோதிகா குளிப்பாட்டுவதை போலவும் கால் டவுசர் மற்றும் முண்டா பனியன் அணிந்து கொண்டு ஜி.வி.பிரகாஷ் பல் துலக்குவது போலவும் வெளியான இந்தப் படத்தின் போஸ்டரை பார்த்தவர்கள் இந்தக் கதை கொலைகாரன் ஒருவனின் உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு உருவாகி வருவதாக கூறியிருந்தனர்.

ஆனால் அதை பற்றி எந்த வித மறுப்பும் படக்குழு கூறவில்லை. கடந்த பிப்ரவரிக்கு தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாகவே நடந்து முடிந்தது. இந்நிலையில் நாளை இதன் டீசரை ஜோதிகாவின் கணவரும் நடிகருமான சூர்யா வெளியிடுகிறார் என பாலாவின் பி ஸ்டுடியோ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு சமூக வலைதளமான ட்விட்டரில் சூர்யா வெளியிட உள்ளதாக அறித்திருக்கிறார்கள். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com