ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினமாக கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பெண்களுக்கான நீரிழிவு தினமாக கடைப்பிடிக்கப்படுவதாக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் காரணத்தை தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்கான இன்சுலின் மருந்தை கண்டுபிடித்தவர் பிரெட்ரிக் பேண்டிங். இவரை கவுரப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு நோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இம்முறை பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று பெண்களுக்கான நீரிழிவு நோய் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. காரணம், பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமிருப்பதே ஆகும். அதே போல் கர்ப்பகால நீரிழிவு நோயின் தாக்கமும் பெருமளவில் அதிகரித்துள்ளது.
கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்பட காரணம்:
கர்பக்காலத்தில் சில பெண்களுக்கு உடல் எடை அதிகமாக இருப்பதாலும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், அவர்களுக்கு கூடுதல் இன்சுலின் தேவைப்படுகிறது. இதனால் அவர்கள் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்து இந்த நீரிழிவு நோய் ஏற்படுகிறது. அதேசமயம் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு நீரிழிவு நோய் இல்லாமல் போகவும் வாய்ப்புகள் அதிகம்.
தடுக்கும் வழிமுறைகள்:
சர்க்கரை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பெண்களைப் பொறுத்தவரை பூப்பெய்தும் காலம் முதலே முறையான உணவுப் பழக்கங்களையும், உடற்பயிற்சியையும் கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இன்று முதல் பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறைகொண்டு கவனித்தால், அடுத்த வருடம் பெண்களுக்கான நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைக்க முடியும். வாழ்க்கையை இனிப்பாகவும் மாற்ற முடியும்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'