Published : 18,Feb 2017 05:41 AM
சட்டப்பேரவையில் கடும் அமளி

நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி கூட்டப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. அப்போது ஓபிஎஸ் ஆதரவு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள செம்மலையை பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறி ஸ்டாலின் முழக்கமிட்டார். இதற்கு ஆதரவாக திமுக உறுப்பினர்களும், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர். சட்டப்பேரவையில் கடும் அமளிக்கிடையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.