[X] Close

ஈரான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 450 ஆக உயர்வு

Iran-Iraq-Earthquake-Kills-More-Than-450

ஈரான் மற்றும் ஈராக் எல்லையொட்டிய பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்‌ந்த நிலநடுக்கத்தில்‌ உயிரிழந்தோர் எண்ணிக்கை 450-ஆக அதிகரித்துள்ளது.

ஈரான், ஈராக் எல்லையையொட்டிய மலைப் பகுதியான ஹலாப்ஜா அருகே நேற்று முன் தினம் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7 புள்ளி 3 ரிக்டர் அளவு பதிவானதாக அமெரிக்க புவியியல் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாய‌மடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சர்போல் இ ஜஹாப் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 


Advertisement

நிலநடுக்கம் காரணமாக மலைப் பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் தரைமட்டானதில் அப்பகுதியே போர்களம் போல காட்சியளிக்கிறது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்‌டதால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close