கொடைக்கானலில் இயங்கிவந்த பாதரச ஆலை 2011 ஆம் ஆண்டு மூடப்பட்டது. ஆனால், இந்த பாதரச ஆலைக் கழிவால் கொடைக்கானல் ஏரி மற்றும் பெரியகுளம் கண்மாய்களில் பிடிக்கப்படும் மீன்களில் பாதரச அளவு பன்மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
கொடைக்கானலில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் 1983 ஆம் ஆண்டு பாதரச தெர்மா மீட்டர் தயாரிக்கும் ஆலையை நிறுவியது, இந்த ஆலையின் பாதரச கழிவுகளால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, 2001 ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் இந்த ஆலைக்கழிவுகளால் இன்றளவும் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஹைதராபாத் ஐஐடி பேராசிரியர் அசிப் குவார்சி என்பவர் மேற்கொண்ட ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கொடைக்கானல் ஏரி மீன்களில் 31.9 முதல் 41.9 மைக்ரோகிராம் வரையில் பாதரசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்பாற்றில் இருந்து நீரை பெறும் பெரியகுளம் கண்மாய்களில் உள்ள மீன்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட 94 முதல் 165 மைக்ரோகிராம் வரையிலும் பாதரசம் கூடுதலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ஆய்வறிக்கையினை வெளியிட்ட கொடைக்கானல் பாதரச மாசை அகற்றுவதற்கான பிரச்சார இயக்கத்தினர் பாதரசம் அதிகம் உள்ள மீன்களை உண்ணக் கூடாது என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide