மெர்சல் வெற்றியை துபாயில் கொண்டாடி வருகிறார் நடிகர் விஜய். அதற்கான புகைப்படங்கள் தற்சமயம் ட்விட்டரில் வெளியாகியுள்ளன.
அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் அமோக வெற்றியடைந்தது. அதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய், மெர்சல் படக்குழுவை அழைத்து தனது நீலாங்கரை வீட்டில் விருந்து வைத்தார். அதில் ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி உட்பட பலரும் கலந்து கொண்டனர். அதன் இன்னொரு பகுதியாக மெர்சல் டீமை தனது சொந்த செலவில் துபாய் அழைத்து சென்றுள்ளார். அட்லி, விஜய், கேமராமேன் ஜான் விஷ்ணு, விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் என ஒரு பெரிய பட்டாளமே சென்றுள்ளது.
உலகம் முழுவதும் 200 கோடி வசூல் செய்ததற்கான பார்ட்டியாக இதனை இவர்கள் கொண்டாடி வருகிறார்கள். துபாய் கடற்கரையில் விஜய் மிக இயல்பாக பையை மாட்டிக் கொண்டு உலாவரும் புகைப்படங்கள் தற்சமயம் சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றன.
Loading More post
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?