Published : 13,Nov 2017 10:05 AM

ஈரான் - ஈராக் நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 328 ஆக அதிகரிப்பு

Iran-Iraq-earthquake-death-counts-increase

ஈரான் மற்றும் ஈராக் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட சக்தி வாய்‌ந்த நிலநடுக்கத்தில்‌ உயிரிழந்தோர் எண்ணிக்கை 328ஆக அதிகரித்துள்ளது.

ஈரானில் வடக்கு எல்லைப் பகுதியில் உள்ள ஹலப்ஜா நகரத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஈரானில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் உயி‌ரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் இடிபாடுகளில் சிக்கி 5000-க்கும் மேற்பட்டோர் படுகாய‌மடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சர்போல் இ ஜஹாப் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. நாட்டையே அச்சுறுத்தியுள்ள இந்த நிலநடுக்கம் காரணமாக மலைப் பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் தரைமட்டானது. இதனால் அப்பகுதியே போர்களம் போல காட்சியளிக்கிறது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்‌டதால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஈரான், ஈராக் எல்லையை ஒட்டிய மலைப் பகுதியான ஹலாப்ஜா அருகே 7.3 ரிக்டர் அளவாக இந்த நிலநடுக்கம்‌ பதிவானதாக அமெரிக்க புவியியல் துறை தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்