Published : 13,Nov 2017 05:13 AM
புதுச்சேரியில் 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

புதுச்சேரியில் கடல் சீற்றம் காரணமாக 2ஆவது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
புதுச்சேரி கடற்பகுதிகளில் தரைக்காற்றுடன் கடல் சீற்றமாகக் காணப்படுகிறது. அதன்காரணமாக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 2ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. நூற்றுக்கணக்கான விசைப் படகுகள் மற்றும் 700க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் மீன்பிடித்துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று சென்னையை அடுத்த எண்ணூர், காசிமேடு, பழவேற்காடு பகுதி மீனவர்களும் இன்று கடலுக்குச் செல்லவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வடகடலோர மாவட்டங்களில் இன்று ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.