Published : 13,Nov 2017 03:59 AM

வடசென்னையை குறிவைத்த மழை: எண்ணூரில் 10 செ.மீ பதிவு

Heavy-Rain-hits-North-Chennai-including-Ennore

சென்னையில் திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி பலத்த மழை பெய்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக மழை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் சென்னையில் பலத்த மழை பெய்தது. சென்னையின் பல இடங்களில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை நீடித்தது. நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கிய மழை பல இடங்களில் இரவு முழுவதும் நீடித்தது. அதிகாலையிலும் பல இடங்களில் மழைபெய்தது.

நேற்றையை மழை வடசென்னையில் தான் முதலில் பெய்ய தொடங்கியது. அதிக அளவு மழைப் பதிவும் எண்ணூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தான் பதிவாகியுள்ளது. எண்ணூரில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இன்று காலையிலும் வடசென்னையின் திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, அரக்கோணம், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கல்லூரி முதல்வர் கருப்பன் தெரிவித்துள்ளார். இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்தில், வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்