[X] Close

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது: தம்பிதுரை

Thambidurai-Speech-about-ADMK

அதிமுகவை அழிக்க எந்த கட்சிக்கும் வலிமை இல்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சசிகலா குடும்பத்தினரிடம் நடத்தப்பட்டுவரும் வருமானவரி சோதனை குறித்து தாம் கருத்து கூற முடியாது என தெரிவித்தார். அத்துடன் தமிழ் மற்றும் திராவிட உணர்வு கொண்ட தமிழகத்தில் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று கூறினார்.

முன்னதாக புதுக்கோட்டையில் ஜிஎஸ்டி வரி குறித்து பேசிய அவர், ஜெயலிலதா இருக்கும் போது ஜிஎஸ்டி-ல் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், ஆனால் தற்போது அவை நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டி‌ருப்பது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close