Published : 12,Nov 2017 11:23 AM

திமுகவுடன் யார் இணைந்தாலும் எதிரிதான்: செல்லூர் ராஜூ

Sellur-Raju-about-DMK-relationship

திமுகவுடன் யார் இணைந்தாலும் நமக்கு அவர்கள் எதிரிதான் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

மதுரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் ஒன்றில் பேசிய அவர், திமுக 17 ஆண்டுகலாம் மத்திய ஆட்சியில் கூட்டணியில் இருந்துள்ளது. ஆனால் எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்திற்கும், தமிழகத்தில் உள்ள யாருக்கும் செய்யவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே யார் திமுகவுடன் சேர்ந்தாலும், அவர்களும் நமக்கு எதிரி தான்” என்று கூறினார்.

மேலும், “நம் சகோதரர்கள் திமுகவில் சேர்ந்தாலும் அவர்கள் நமக்கு எதிரிதான் என்பதை அதிமுகவினர் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோன்று யார் என்ன சொன்னாலும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம்.” என்றும் அவர் தெரிவித்தார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்