[X] Close

ஜோதிடர் சந்திரசேகரன் வீட்டில் ஐடி சோதனை நிறைவு

IT-raid-completed-astrologer-s-house

நாமக்கல்லில் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் நடந்து வந்த வருமான வரி சோதனை முடிந்துள்ளது.

சசிகலவின் வழக்கறிஞர் செந்தில்குமார், அவரது ஜீனியர் பாண்டியன், டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் வழக்கறிஞர் பாலுச்சாமி, செந்திலின் நண்பர்களான வழக்கறிஞர் பிரகாஷ், மகாலட்சுமி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சுப்பரமணி ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 9 தேதி காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். 65 மணி நேரத்திற்கு பிறகு சோதனை முடிந்துள்ளது.

பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் டிடிவி தினகரனின் ஜோதிடர் சந்திரசேகரனின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையை முடித்துள்ளனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close