Published : 11,Nov 2017 04:58 PM
'தட்றோம் தூக்கறோம்’ பாடல் பற்றி சிம்பு பதில்

'தட்றோம் தூக்கறோம்’ பாடல் சர்ச்சை பற்றி நடிகர் சிம்பு பதில் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “எனக்குச் சரி என்று தோன்றினால் எந்தவிதமான துணிச்சலான கருத்தையும் சொல்லத் தயங்க மாட்டேன். இந்தப் பாடலை நான் எழுதவில்லை. இசையமைக்கவில்லை. என் படத்துக்காவும் இது உருவாக்கப்படவில்லை. இப்படி ஒரு பாடலை எழுதிவிட்டு, என்னிடம் வந்தார்கள். படித்துப் பார்த்தேன். நன்றாக இருந்தது. மக்கள் பட்ட அவஸ்தைகளைச் சொல்லியிருந்ததால், ஒப்புக் கொண்டு அதைப் பாடினேன். அதில் எந்தத் தவறும் இல்லை. டிமானிடைசேஷனில் மக்கள் பாதித்ததைத்தான் அதில் சொல்லியிருந்தார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் தீமையும் இருக்கும்தானே. அதைத்தான் அந்தப் பாடலில் சொல்லியிருந்தார்கள். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கோ அந்தப் பாடலுக்கோ இல்லை” என்றார்.