Published : 11,Nov 2017 04:48 PM

சர்வதேச ஸ்குவாஷ்: இந்திய வீரர் சவ்ரவ் கோஷல் சாம்பியன்

Saurav-Ghosal-beats-Nicolas-Mueller-to-win-JSW-CCI-International-Squash-Circuit

மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில், இந்திய வீரர் சவ்ரவ் கோஷல் சாம்பியன் பட்டம் வென்றார். 

மும்பையில், சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடந்தது. இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் நிக்கோலஸ் முல்லரை எதிர்த்து சவ்ரவ் கோஷல் விளையாடினார்.  மொத்தம் 44 நிமிடங்கள் இந்தப் போட்டி நீடித்தது. 

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சவ்ரவ் கோஷல் 11-6, 11-8,11-8 என்ற நேர்செட்களில் எளிதில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார். சாம்பியன் பட்டம் பெற்ற கோஷலுக்கு 7,671 டாலர் பரிசாக வழங்கப்பட்டது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்