Published : 11,Nov 2017 11:39 AM

3 மாத மழை 5 நாட்களில் பெய்தது: முதலமைச்சர் பழனிசாமி

Three-month-rain-hits-in-5-days-TN-CM-Palanisami

தமிழகத்தில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை கடந்த வாரத்தில் 5 நாட்களில் பெய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து 3 மாவட்ட ஆட்சியர்கள், சிறப்பு பணி ஐஏஎஸ் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார். 

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர் நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளால் கூடுதலாக நீர் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வெள்ளம் தேங்கிய பகுதிகளில் உடனடியாக நீர் அகற்றப்பட்டதாகவும், மத்திய அரசின் நிவாரணம் விரைவில் கிடைக்கும் என்றும் முதல்வர் தெரிவித்தார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்