Published : 11,Nov 2017 10:40 AM

போலீஸ் பாதுகாப்பில் சிம்பு வீடு

Simbu-STR-house-in-T-Nagar-under-police-protection

சென்னை தி.நகர் மாசிலாமணி தெருவில் உள்ள நடிகர் சிம்புவின் புதிய வீட்டிற்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

’தட்ரோம் தூக்குறோம்’ படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். அந்தப் பாடல் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு பற்றி விமர்சித்திருக்கிறது.இந்தப் பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். அவரது வரிகளில் ”ஏழ வீட்டில் இருப்பதெல்லாம் சிவப்பு பணமடா..குருவி போல சேத்த காசில் கள்ளம் இல்லடா..நாட்ட மாத்த வேணுமுனு நீங்க நெனச்சா..கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா..” என கோபம் கொப்பளிக்கிறது. மேலும் ஜிஎஸ்டி பற்றிய விமர்சனங்களும் வருகின்றன. இதற்கு #DemonetizationAnthem என ஹேஷ்டேக் போட்டு இருக்கிறார்கள். எந்த சூழலில் என்ன விஷயத்திற்காக இந்தப் பாடல் படத்தில் இடம் பெற்றிருக்கிறது என்பது திரைப்படம் வெளியானால்தான் தெரியும். ஆனால் சிம்பு பாடியுள்ளதால் சர்ச்சை சலசலக்க தொடங்கியுள்ளது.   


இந்தப் பாடலைப் பாடிய சிம்புவுக்கு எதிராக பா.ஜ.க தரப்பிலிருந்து எதிர்ப்பு வர தொடங்கியுள்ளது. 'மெர்சல்' சர்ச்சை இப்போதுதான் ஓய்ந்துள்ளது. அதற்குள் மீண்டும் சிம்பு பாடல் விவாதத்தை கிளப்பி உள்ளது. சிம்புவின் DemonetizationAnthem பாடலுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தலாம் என்பதால் முன்கூட்டியே அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்