குண்டு குழி சாலைகள்: நூதன போராட்டத்தில் மக்கள்

குண்டு குழி சாலைகள்: நூதன போராட்டத்தில் மக்கள்
குண்டு குழி சாலைகள்: நூதன போராட்டத்தில் மக்கள்

ராமநாதபுரத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க பல முறை மனு கொடுத்தும் நடவ‌டிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ராமநாதபுரம் கோவிலங்குளங்குளத்திலிருந்து பறையங்குளம் செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து, குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக பொதுமக்கள் குற்றசாட்டியுள்ளனர். மேலும் குமிலான்குளம், சாயல்குடி, பெருநாழி, கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல இந்த ஒரு சாலை மட்டுமே பயன்பாட்டிற்கு உள்ளதால் இதனை உடனடியாக சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் பல முறை மனு கொடுத்து உள்ளனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம்  எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் சேசதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com