Published : 10,Nov 2017 11:01 AM

ரஜினியும் களத்தில் குதிக்கிறாரா? டிசம்பரில் அறிவிப்பார் என தகவல்

Rajini-entered-to-politics-from-sources

நடிகர் கமல்ஹாசனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தும் தமது பிறந்தநாளன்று அரசியல் வருகை குறித்து அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் பல தலைவர்கள் இருந்தும், அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று கூறியிருந்தார். அத்துடன் போர் வரும் போது தயாராக இருங்கள் என தனது ரசிகர்களிடம் அவர் கூறியிருந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு பல்வேறு சர்ச்சைகளை கிளப்ப, அவர் அரசியலுக்கு வருவரா? மாட்டாரா? என்ற விவாதங்களும் எழந்தன. அவ்வாறு வந்தால் மக்கள் ஆதரவு கிடைக்குமா? என்ற விமர்சனங்களும் எழுந்தன. 

அத்துடன் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், பாரதிய ஜனதா உள்ளிட்ட எந்த கட்சியிலும் இணையமாட்டார் என்றும், தனிகட்சிதான் தொடங்குவார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொள்கையைப் பொறுத்தவரை அவர் வலதுசாரியாகவே, இடதுசாரியாகவோ இல்லாமல் நடுநிலையான கொள்கையையே முன்னிறுத்துவார் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் தனது பிறந்த நாளன்று ரஜினி தனது கட்சியை அறிவிப்பார் என்றும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்